கள்ள ஓட்டு போடுவது எப்படி..?காமெடி கலாட்டா-ஆனந்த விகடன்


ஆனந்த விகடன் இப்பதான் வந்துச்சு..ஒரு புரட்டு புரட்டினேன்..செம காமெடி நொறுக்கல்கள் சில இருந்தன..அதில் கள்ள ஓட்டு போடுவது எப்படி என்னும் தலைப்பில் அந்தக்கால கள்ள ஓட்டு ஸ்பெசலிஸ்ட் ஒருவரை பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்....

#1989 ஆம் ஆண்டு மதுரை மருத்துவ கல்லூரி வளாகம் ஓட்ய்டு எண்ணிக்கை பரபரப்பாய் நடந்துகொண்டிருந்தது...நான் நாலு கள்ல ஓட்டு போட்டேன்..-காளிமுத்து ‘இப்படி ஒரு துண்டு சீட்டு ஓட்டு பெட்டிக்குள் கிடந்தால் எப்படியிருக்கும்>ரணகளமாகிவிட்டது கல்லூரி வளாகம்.!
தி.மு.க காரன் கள்ள ஓட்டைக் குத்தித்தள்ளிட்டான்’என்று ரகளை செய்தார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
அடியேய்...லீடிங் ரெண்டாயிரத்துக்கு மேல போய்கிட்டிருக்கு.. நாலு ஓட்டை பத்தி பேசற../நாலு என்ன..நாற்பது ஓட்டை கழிச்சுக்க...என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வெறுப்பேற்றினார்கள் உடன்பிறப்புகள்.


பணம் கொடுத்தால்தான் சொந்தக்கட்சிக்கே ஓட்டு-இது இந்தக்காலம்;கள்ள ஓட்டு போட்டாவது தலைவனை அரியணை ஏற்றியது அந்தக்காலம்..வாக்குப்பதிவு இயந்திரம் வருவதற்கு முன்பு எப்படி கள்ல ஓட்டு போடுவார்கள் தெரியுமா..?ஓட்டுக்காக செத்தவர்களை பிழைக்க வைக்கும் தேர்தல் வைத்தியர்கள் ஊருக்கு 10 பேராவது இருப்பார்கள் அப்படி ஒரு வைத்தியர்தான் சந்திரன் இதோ பேசுகிறார்...
.
’’எலெக்‌ஷனுக்கு முதல் நாள் சாயங்காலமே வாக்கு சாவடி அதிகாரிகள் பூத்துகளுக்கு வந்துருவாங்க..அந்த நேரத்துல அவங்களுக்கு கூடமாட ஒத்தாசை பண்றாப்புல ,பேச்சு கொடுட்ய்ஹ்து நாடி துடிப்பை தெரிஞ்சுக்குவோம்..நாளைக்கு காலையில டிபனும் ,மத்தியானம் பிரியாணியும் நாங்க பார்த்துக்குறோம்,உங்ஜ்களுக்கு மட்டனா சிக்கனா ?னு பிட்டை போடுவோம்.வீட்டுக்கு வீடு பூத் ச்லிப் குடுக்குறப்பவே,யாரு வெளியூருல இருக்கா..?யாரு சுடுகாட்டுக்கு போயிட்டாங்கன்னு ரவுண்ட் பண்ணி வெச்சிக்குவோம்.வாக்கு பதிவு அன்னிக்கு செத்தவங்க ஓட்டைத்தான் முதலில் போடுவோம்.

மதியம் 3 மணிக்கு மேல எல்லோரும் லேசாக அசந்துருவாங்க.அதுதான் கள்ள ஓட்டு போட சரியான நேரம் அந்த நேரத்துல கந்த சாமி பொண்டாட்டி காதர் பொண்டாட்டி ஆகிருவா.அப்துல்காதர் பொண்டாட்டி அன்னலட்சுமி ஆயிருவா.தெரிஞ்ச பொம்பளைங்களை கள்ள ஓட்டு போடுரதுக்காக செட்டப் பண்ணி அனுப்பி வைப்போம்.சில நேரங்கள்ள நாங்க சைஸ் பண்ணி அனுப்புற ஆளை ,எங்க ஏஜண்டுகளே அடையாளம் தெரியாம வேற கட்சி ஆளுன்னு தப்பா நினைச்சு அப்ஜக்‌ஷன் பண்ணிடுவாங்க..அதனால ஆம்பளைன்னா கழுத்துல துண்டு ,பொம்பளைன்னா ஒத்த கையில மட்டும் வளையல்னு ஏதாவது அடையாளத்தோடு அனுப்பி வைப்போம்’’என்கிறார்.

கள்ள ஓட்டு போடுவதை திரில்லிங்கான அனுபவமாக ரசிக்கும் ஆட்கள் ஊருக்குள் நிரையவே உண்டு.தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே விரல் மையை அழிக்க ஆயுதம் தேடி புறப்பட்டு விடுவார்கள் மை வைப்பதற்கு முன் தலையில் தடவியிருக்கும் விளக்கெண்ணையை விரலில் தேய்த்துக்கொள்வார்கள்.இதனால் மை விரலில் ஒட்டாமல் துடைத்தாலே ஓடிவிடும்.நான் இத்தனை ஓட்டு போட்டேன்...இன்னார் ஓட்டையெல்லாம் நாந்தான் போட்டேன்..என்று பெருமை அடித்துக்கொள்வதற்கே ஊருக்கு ஊர் ஒரு கோஸ்டி இருக்கும்..இப்படித்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகத்தின் ஓட்டுக்கே வேட்டு வைத்தார்கள்.

‘’எங்க ஊர்ல ஜனநாதன் என்பவர் அந்த காலத்து ஜனதா கட்சி பிரபலம்.போடியில ஜெயலலிதா போட்டியிட்ட தேர்தலில் அவருக்காக முழு மூச்சாய் தேர்தல் வேலை பார்த்தார்.எலெக்‌ஷன் அன்னிக்கு காலையில வேஷ்டியை மடிச்சு கட்டிகிட்டு முதல் ஆளா ஓட்டு போட வந்தாரு.ஆனா அதுக்கு முந்தியே அவரோட ஓட்டை போட்டுட்டாங்க.வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சாரு.எதுவும் நடக்கலைன்னதும் மண்ணை வாரித்தூத்தாத குறையா திட்டிட்டு போனாரு.இதையெல்லாம் கூட்டத்தோட கூட்டமா நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த எங்க கட்சியை சேர்ந்த லட்சுமணன்,மாப்ள..நம்ம ஓட்டை போடுறமோ இல்லையோ..இந்தாளு ஓட்டை போட்டே தீரணும்னு ஒரு வருஷமா பிளான் பண்ணேன் இல்லனு மெதுவா சொன்னாரு’’போடியை சேர்ந்த கதர் புள்ளி முருகானந்தம் இப்படி சொல்லி சிரிக்கிறார்.

மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் வாக்கு சாவடிகளில் இருக்கும் பூத் ஏஜண்டுகள் இருக்குறதுல ஆளுக்கு பப்பாதி என்ற பாலிஸிக்கு வந்துவிடுவார்கள்.அது என்ன ஆளுக்கு பாதி..?திருச்சியை சேர்ந்த பிரமன் சொல்கிறார்,’’இதுக்கு மேல ஓட்டு போட ஆள் வராதுன்னு தெரிஞ்சதும்,ஆளுக்கு இத்தனை ஓட்டை மடக்கிக்குவோம்னு தி.மு.க காரங்களும் நாங்களும் ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்குவோம்..இதுக்கு அங்க இருக்கிற அதிகாரிகளும் உடந்தை.ஆனா அதுலியும் தி.மு.க காரங்க கள்ளம் பாய்ஞ்சிருவாய்ங்க.ஆளுக்கு பத்து ஓட்டுன்னு பேசிகிட்டு முதலில் அவங்க பத்து ஓட்டை புகுத்திருவாங்க.அடௌத்ததா எங்காளுங்க போடுறப்ப எட்டாவது ஓட்டுலியே’’கள்ள ஓட்டுன்னு சொல்லி ஆட்டையை கலைச்சிருவாய்ங்க..எமகாதக பயலுங்க..என்கிறார்.

நன்றி-ஆனந்தவிகடன் 6.4.2011.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...