ஜூனியர் விகடன் நேற்று வந்த இதழ் பரபரப்பை கிளப்பி இருக்கிறது...அதில் வந்த செய்தி அ.தி.மு.க வுக்கு கலக்கத்தையும் தி.மு.க வுக்கு குஷியையும் ஏற்படுத்தி இருக்கிறது....
தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் (நக்கீரன் ,முரசொலி நீங்கலாக)அ.தி.மு.க வுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றே சொல்லி வந்த நிலையில் ஜூனியர் விகடனில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது...
தொங்கு சட்டசபைதான் அமையும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பதே அது...
ஜெயலலிதா 5 ஆண்டுகளாக கலைஞர் ஆட்சியை ,மைனாரிட்டி அரசு என்றாரே..அதுபோல கலைஞர் இனி வரும் 5 ஆண்டுகள் ஜெயலலிதா ஆட்சியை மைனாரிட்டி அர்சு என எள்ளி நகையாடும் சூழல்தான் இருக்காம்...
ஆனா அப்ப கூட கலைஞர் வந்துடுவாருன்னு சொல்லலை..சந்தோசம்
தி.மு.க கூட்டணிக்கு 70 இடங்களும் அ.தி.மு.க கூட்டணிக்கு 100 இடங்களும் கிடைக்குமாம்..இது ஒரு தனியார் ஏஜன்சி எடுத்த கருத்து கணிப்பு தகவலாம்...
ஆனால் லயோலா கல்லூரி கருத்து கணிப்பு அ.தி.மு.க தனிமெஜாரிட்டியுடன் வெல்லும் என்றே அறிவித்துள்ளது... சென்ற முறை லயோலா கல்லூரி கருத்து கணிப்பை அடிக்கடி ஒளிபரப்பிய சன்,கலைஞர் டிவிகள் இப்போ அமைதியாக இருக்கின்றன..சென்ற முறை உச்சி முகர்ந்த கலைஞர்,இந்த முறை இவையெல்லாம் பூணூல் உருவிக்கொண்டு,இருப்பவர்கள் செய்யும் சதி வேலை என்கிறார்..