நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா..? கார்டை தேய்ப்பதற்கு முன் முதலில் இதைப் படியுங்கள்…

1. உங்களிடம் கிரெடிட் கார்டு இருப்பதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக நினைக்காதீர்கள்.

2. ஒரே ஒரு கிரெடிட் கார்டு போதுமானது.

3. கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் எடுத்த நாள் முதலே வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

4. முடிந்தவரை கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்து செலவு செய்யுங்கள். அப்போதுதான் பொருளின் மதிப்பு தெரியும்.

5. ஒரு கார்டில் இருக்கும் கடனை அடைக்க இன்னொரு கார்டைப் பயன்படுத்தாதீர்கள்.

6. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது சேவைக் கட்டணம் உண்டா என்று தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

7. பில்லிங் தேதி மற்றும் பணம் கட்ட வேண்டிய கடைசி தேதியை மறக்கவே மறக்காதீர்கள்.

8. இணையம் மூலம் உங்களது கிரெடிட் கார்டு வரவு செலவுகளை அடிக்கடி சரிபாருங்கள்.

9. ஓட்டல், பெட்ரோல் பங்கில் கார்டைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. உங்கள் கார்டை டூப்ளிகேட் செய்ய வாய்ப்புண்டு.


10. ஸ்டேட்மென்ட் வந்தவுடன் முழுமையாகப் படியுங்கள். அதில் உள்ளது நாம் செய்த செலவுதானா என்று பாருங்கள். 11. உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்தின் தொலைபேசி எண் அல்லது கஸ்டமர்கேர் எண்ணை தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கார்டு தொலைந்தால் புகார் செய்யப் பயன்படும்.

12. உங்களது கிரெடிட் கார்டு பாஸ்வேர்டை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.

13. கார்டு வாங்கியவுடன் அதன் பின்பகுதியில் உங்கள் கையெழுத்தை மறக்காமல் போட்டு வையுங்கள்.

14. ஆன்லைனில் வர்த்தகம் செய்யும்போது நம்பத் தகுந்த, பிரபலமான இணையதளங்களையே பயன்படுத்துங்கள்.

15. ‘உங்களுக்கு புதிய ஆஃபர் தருகிறோம். பாஸ்வேர்டு மற்றும் இதர விவரங்களை கொடுங்கள்’ என்றால் உஷாராகுங்கள்.

16. பின்நம்பரை அடிக்கடி மாற்றுங்கள். அதை மற்றவர்களுக்கு தெரியும்படி எழுதி வைக்காதீர்கள்.

17. கிரெடிட் கார்டில் அதிக லிமிட் வைத்துக் கொள்ளாதீர்கள். இது உங்களை அதிக செலவு செய்யத் தூண்டும்.

18. உங்கள் வருமானத்தில் கிரெடிட் கார்டுக்கென குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை ஒதுக்கி அதற்கேற்ப செலவழியுங்கள்.

19. முக்கியமான சமயங்களில் மட்டும் கிரெடிட் கார்டை வெளியே எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை டெபிட் கார்டு மூலமே செலவு செய்யுங்கள்.

20. எல்லாவற்றுக்கும் மேலாக, கிரெடிட் கார்டில் ஒரு மாதம் பணம் கட்டத் தவறினால், இது நமக்கு சரிப்பட்டு வராது என்று யோசிக்காமல் கார்டை தலையைச் சுற்றி தூர எறிந்துவிடுங்கள்.


நடத்தையில் சந்தேகம்; மனைவி மூக்கை அறுத்த பாகிஸ்தான் வாலிபர்








பாகிஸ்தானில் பெண்கள் கள்ளத் தொடர்பு வைத்து இருந்தாலோ அல்லது நடத்தையில் சந்தேகம் இருந்தாலோ அவர்களை காட்டுமிராண்டி தனமாக தண்டிக்கின்றனர்.

இப்போது அதே போல 23 வயது பெண்ணை கடுமையாக தண்டித்து உள்ளனர். சிந்து மாகாணத்தில் உள்ள காம்பர் என்ற இடத்தை சேர்ந்த இந்த பெண் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த பெண்ணின் மூக்கை அறுத்தார். பின்னர் அவரின் கை விரல்களையும் துண்டித்தார்.

படுகாயம் அடைந்த நிலையில் அவர் சந்கா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கணவரால் மூக்கை அறுக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தண்டனை கொடுத்து இருந்தாலும் மேலும் அவருக்கு கோர்ட்டு தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தானில் பெண்கள் கள்ளத் தொடர்பு வைத்து இருப்பது சட்டப்படி குற்ற மாகும்.இந்த பெண் கள்ளத் தொடர்பு வைத்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மேலும் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ஒரு பெண்ணின் மூக்கை தலிபான் தீவிரவாதிகள் அறுத்தனர்.

இந்தியாவை தொடர்ந்து அவமானப்படுத்தும் அமெரிக்கா...

2003-ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் அமெரிக்காவின் டல்லஸ் விமானநிலையத்தில் வைத்து ஆடைகளை அவிழ்த்து பரிசோதிக்கப்பட்டார்.

2009 ஜூலை 22-ல் முன்னாள் இந்திய ஜனாதிபதி எ.பி.ஜெ.அப்துல் கலாம் அமெரிக்காவின் காண்டினண்டல் ஏர்லைன்சில் ஷூவை அவிழ்த்து பரிசோதனை நடத்தப்பட்டார்.

2009 மே 6-ல் மலையாள சினிமா நடிகர் மம்மூட்டி நியூயார்க்கில் கென்னடி விமானநிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டார்.

2009 ஆகஸ்ட் 14-ல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியூஜெர்ஸி விமானநிலையத்தில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரிக்கப்பட்டார். முஸ்லிம் பெயர்தான் அதற்கு காரணம்.

2010 செப்டம்பர் 27-ல் இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் ஷிகாகோ விமானநிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டார்.

2010 டிசம்பர் 4-ல் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் அமெரிக்காவின் மிசிசிபி விமானநிலையத்தில் வைத்து உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் ரஷ்யா

ரஷ்யாவின் ஜனாதிபதி திமித்ரி மெத்வெதேவ் தலைமையில், அரசசார்பற்ற மற்றும் பொது நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜூலியனை விடுவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசினை வழங்குவதற்கு பரிந்துரை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளதாக, பிரிட்டனை தளமாக கொண்டியங்கும் ‘த கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர், ‘மாபியா குழுவினர்’ எனவும், ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புட்டின் ஒரு ‘அல்பா டாக்’ எனவும் அரச உயர் மட்டத்தலைவர்களிடையே கேலியாக பேசப்படுவதுண்டு என அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது விரிவாக பார்க்க
பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் கைதான ஜூலியன் அசாஞ்சே தற்சமயம் லண்டன் சிறைச்சலையில் தடுப்புக்காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சீன அரச எதிர்ப்பாளர் லியூ ஷியபோவிற்கு சமானாத்துக்கான நோபல் பரிசு கொடுப்பதை கடுமையாக எதிர்த்திருந்த ரஷ்யா, ஆசாஞ்சேவிற்கு இவ்விருதை வழங்க பரிந்துரை செய்வது, வேடிக்கையாகவா? அல்லது அமெரிக்காவுக்கு வஞ்சம் தீர்க்கவா? என்ற கேள்வி எழுப்படுகின்றது

குவைத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்

குவைத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்...
குவைத் சிட்டி,டிச.10:குவைத் நாட்டில் சுலைப்கட்டில் எதிர் கட்சியினர் நடத்திய பேரணியை போலீசார் தடுக்க முயன்றதில் ஏற்பட்ட மோதலில் 5 எம்.பிக்கள் உட்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசாரின் லாத்திசார்ஜில்தான் இவர்களுக்கு காயமேற்பட்டது. மக்கள் கூட்டத்தை கலைத்துவிட போலீசார் முயன்றதை தடுக்க முயன்றபொழுது போலீசார் லாத்திசார்ஜ் நடத்தினர்.

காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நூற்றுக்கணக்கான கார்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பல மணிநேரங்கள் பாதிப்பிற்குள்ளானது.

1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அரசு சூழ்ச்சிச் செய்வதாக கூறித்தான் எதிர் கட்சியினர் பேரணிக்கும் பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடுச் செய்தனர். இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷேக் நஸீர் முஹம்மது அல் அஹ்மத் அல் ஸபாஹில் அழுத்தம் கொடுப்பார் என எம்.பிக்கள் அறிவித்தனர்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...