ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு....எதிர்கட்சிக்கு ஆப்ப



அடடே...வாப்பா...தேர்தல் முடிஞ்சிருச்சு....இனிமே எங்கே வரப்போறேன்னு நினைச்சேன்?
தேர்தல் முடிஞ்சா என்னப்பா? இன்னும் வாக்கு எண்ணிக்கை, ஆட்சியமைப்புன்னு எவ்வளவோ இருக்கே அதுவரை இது தொடரும்...

சரி யாரு ஆட்சியமைப்பாங்கன்னு நினைக்கிறே?....
எனக்கென்னவோ ஆளுங்கட்சிதான் மறுபடியும் வரும்ன்னு தோணுது.....

எப்படி சொல்றே?
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த  தடவை 78 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருக்கு.

அதனால?....
 ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு....எதிர்கட்சிக்கு ஆப்புன்னு நினைக்கிறேன்....

அதெப்படி சொல்லமுடியும்...தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு கொடுத்ததால நிறைய பேரு பயமில்லாம வாக்களிக்க வந்திருக்கலாம்ல?...
 இருக்கலாம்....அதேநேரம் இந்த தேர்தல்ல ஆளுங்கட்சி நிறையா பணம் கொடுத்திருக்கு ....ஏறக்குறைய ஒருதொகுதில இருக்க மொத்த வாக்களர்களில் பாதி பேருக்கு பணம் கொடுத்துருக்காங்க....பணம் வாங்குன எல்லோரும் ஒட்டு போட வந்திருக்கலாம் இல்லியா....அப்படி பணம் வாங்குன எல்லோரும் பயந்து போயி ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தாலே ஆளுங்கட்சி ஜெயிச்சிரும் இல்லியா?அதோடு அரிசி,பருப்பு,உளுந்து, இலவச டி.வி., ஆம்புலன்ஸ் என்று பயனடைந்தவங்க எல்லோரும் வாக்களித்தாலே போதுமே ஆளுங்கட்சி  ஜெயிக்க...

அப்படின்னாஇலவசங்களும்,பணமும்தான் முடிவு பண்ணுது அடுத்த ஆட்சிய.. ஜனநாயகத்துக்கு வேலை இல்லைன்னு சொல்லு....
மக்கள் பணம் வாங்குறத நிறுத்தறவரை ஜனநாயகத்தை பணநாயகம் வீழ்த்திட்டே இருக்கும்.இதுதான் நிதர்சனம்.

இந்த தேர்தல்ல நிறைய இடங்கள்ள 49 ஒ பதிவாயிருக்குன்னு சொல்றாங்களேப்பா....
ஆமாம்...நீலகிரி மாவட்டத்துல கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட மசினகுடியிலதான் இந்த தடவை 49 ஒ அதிகமா பதிவாகிருக்காம்...

அவங்களுக்கு நிறைய மிரட்டல் வந்திருக்குமே....
வரத்தான் செய்யும்....என் நண்பன் ஒருவன் எங்க ஊர்ல 49 ஒ போடணும்ன்னு சொல்லும்போது அங்கே பூத்ல இருந்த ஏஜெண்டுகள் எல்லோரும் வேணாம்பா...49 ஒ போடாதேப்பான்னு சொன்னாங்களாம்...ஆனா இவன் போட்டுட்டுத்தான் வந்தான்...

நிறைய பேருக்கு 49 ஒ போட  ஆசைதான் என்றாலும் நமக்கு ஏன் பிரச்சினைன்னு போடாம விட்டுருக்கலாம்தானே...
நிஜம்தான்....அதுக்கு காரணம் 49 ஒ-வை வெளிப்படையா வச்சதுதான்...இனி வரும் தேர்தல்ல வோட்டு போடற மிசின்லையே வேட்பாளர்கள், சின்னங்களுக்கு கீழே 49 -வுக்கும் ஒரு பட்டன் வச்சிட்டா யாரும் பார்க்காத அளவுக்கு 49  போடலாம். இன்னும் நிறைய பேரு தைரியமா வாக்களிப்பாங்க

என்னத்த....இப்பெல்லாம் யாருக்கு ஓட்டு போடறாங்கன்னே  வீடியோ எடுத்துடறாங்கலாம்ல....
நீ ரஜினி ஓட்டுப்போட்டத பத்தி சொல்றேன்னு நினைக்கிறேன்....பொதுவா ஒரு வி ஐ.பி வோட்டு போடவந்தா வீடியோ எடுக்கறது பத்திரிகை காரங்க வழக்கம்....ஆனா,யாருக்கு ஓட்டு போடுறாங்கன்னு தெரியாத அளவுக்கு ஒரு குறிப்பிட்ட தூரத்துலேயே அவங்கள நிறுத்திடுவாங்க...ஆனா இந்தமுறை ரஜினி ஓட்டுப்போடும்போது பக்கத்துல போயி வீடியோ எடுத்திட்டாங்களாம்.அதுல ரஜினி யாருக்கு வோட்டு போட்டாருன்னும் பதிவாகிடுச்சாம்...

இது தப்பாச்சே இதை எப்படி பூத்ல இருந்த ஆபிசருங்க அலோ பண்ணாங்க?....
அதான் தெரியல.....வேறு ஏதும் பிரச்சினை வருமான்னு இனிமே தான் பார்க்கணும்?....

நடிகை திரிஷாவுக்கு கூட ஏதோ பிரச்சினையாமே?....
அது ஒண்ணுமில்லைப்பா...ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வாக்குசவடியில நடிகை திரிஷா,அவங்க அம்மா, பாட்டின்னு மூணுபேரும் வோட்டு போட போயிருக்காங்க....ஆனால் வரிசையில நிக்காம நேரா பூத்துக்குள்ள போயிட்டாங்களாம்..

அதெப்படி எல்லோரும் வரிசையில நிக்கும்போது இவங்களுக்கு மட்டும் என்னவாம்...நடிகையின்னா  நேரா போயிட இது என்ன ஷூட்டிங்க ஸ்பாட்டா?
அதைத்தான்பா ஒரு வாக்காளர் கேட்டிருக்காரு...ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் வந்திருச்சாம்.அவங்களுக்குள்ள ஆங்கில புலமையை திட்டுறதுல காட்டிருக்காங்க...அப்புறம் ஆபிசருங்க ஓடிவந்து சமாதான படுத்தி இருக்காங்க...திரிஷா பாட்டிக்கு வயசாகிட்டதால அவங்க வரிசையில ரொம்பநேரம் நிக்கமுடியாதுன்னு அவங்க மட்டும் நேரா போயி ஒட்டுப்போட்டுட்டு கிளம்பிட்டாங்களாம்...திரிஷாவும், அவங்க அம்மாவும் இருபது நிமிடம் வரிசையில நின்னுதான் ஓட்டு போட்டிருக்காங்க...

வோட்டுபோடறதுல பொதுமக்களுக்கு  இருக்கற அக்கறை கூட நம்ம பிரதமருக்கு இல்லையாமே...
வருத்தமாத்தான் இருக்கு என்ன பண்றது? அசாம் மாநிலத்துல திஸ்பூர் என்கிற சட்டமன்ற தொகுதியில தான் நம்ம பிரதமருக்கும் அவங்க மனைவிக்கும் வோட்டு இருக்காம்.கடந்த 11-ஆம் தேதி அங்கே நடந்த தேர்தல்ல இவங்க ரெண்டு பேருமே வாக்களிக்களியாம்.
ஒரு ஓட்டோட மதிப்பு அவருக்கு எங்கே தெரியப்போகுது...அவருதான் நோகாம நொங்கு திங்கறவராச்சே...

அதென்னப்பா நோகாம நொங்கு  திங்கறது?
வேறென்ன அவரு எங்கே தேர்தல்ல போட்டியிட்டாரு...ஒவ்வொரு தடவையும் ராஜ்யசபா எம்.பி.யாத்தானே இருக்காரு...மக்கள்ட்ட வோட்டு வாங்கியா ஜெயிக்கறாரு....அதான் அவருக்கு ஒரு வோட்டோட மதிப்பு தெரியல...

சரிவிடு....நம்ம நாட்டோட நிலைமை அப்படி....ஜெயலலிதா என்னவோ சொல்லிருக்காங்க போல...
ம்....தேர்தல் கமிஷனின் சிறப்பான நடவடிக்கைகளால், தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சில சம்பவங்களை தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர் என்று சொல்லிருக்காங்க....
பார்க்கலாம்....ஒருவேளை தோற்றாலும் இதைதான் சொல்றங்களா? அல்லது தேர்தல் கமிசன் மேல குற்றசாட்டு வைக்கிறாங்களான்னு....

அப்புறம் காங்கிரசிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜனை தங்கபாலு நீக்கிட்டாராமே?
அதைவிடுப்பா...அவங்க கதை எப்போதுமே காமெடிதான்.தேர்தல் முடிஞ்சாலும் காமெடி தொடருது....சரிப்பா நான் கிளம்பறேன்..இன்னொரு நாளைக்கு பார்ப்போம்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...