450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை
பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு
பூமி சுமந்த பாரத்தை விட
எங்கள் மனபாரம் அதிகரித்ததே!
விரைப்பான வெண் அங்கிக்குள்
சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்
வீழ்த்தப்பட்ட நீதிகண்டு
விறைப்பால பேசலியோ!...
விலைபோயிட்டு பேசலியோ!காத்திருந்த நீதி
கதவை சாத்தியது
காவியின் கரங்களில்
நீதியின் சாவிகள் அடைக்கலம் தேடினஆனாலும்
ஓ!எங்கள் பாப்ரியே!
நாங்கள் சக்திப் பெறுவோம்!
விரக்தியை கருவறுப்போம்!
யுக்தியை வரையறுப்போம்!
உனை ஒருநாள் மீட்டெடுப்போம்!
உனது வீழ்ச்சியை
எங்களது எழுச்சியால்
வென்றெடுப்போம்!
உன் மீது படிந்துபோன நஜீஸுகளை
அகற்றிவிட்டு
சுஜூது செய்வோம் ஒருநாள்!