உயிருடன் இருக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உணவு உட்கொண்டாக வேண்டிய வினோத நோயால் அவதியுறும் இளம் பெண் !!!
இவருடைய தற்போதைய எடை வெறும் 25.4 கிலோகிராம் மட்டுமே மற்றும் இவர் உடம்பில் உள்ள மொத்த கொழுப்பின் அளவு வெறும் 0% இதனால் இவர் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறார் என்று அர்த்தம் இல்லைஇவர் ஒரு நாளைக்கு 60 முறை சாப்பிட்டு கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால் ??
இந்த பெண்ணின் தாய் இவரை பற்றி கூறுகையில் ''மருத்துவர்கள் சொன்னார்கள் இந்த பெண் உயிர்வாழ்வதே மிகபெரும் கேள்விகுறி அப்படியே பிழைத்தாலும் மற்ற குழந்தைகளை போல் நடக்கவோ பேசவோ செய்வாரா என்பது உறுதியாக சொல்ல முடியாது என்றனர்'' என்றார்
இவர் சிறுமியாக இருக்கும் போது பெரும்பாலும் இவருக்கான உடையை பொம்மைகளுக்கான உடைகள் விற்கும் இடத்தில்தான் வாங்குவார்களாம் ஏனென்றால் மற்ற சிறுவர் கடைகளில் விற்கும் உடை இவருக்கு பொருந்தாது என்பதால்
ஆனால் மருத்துவர்களின் கணிப்பை எல்லாம் பொய்யாக்கி தற்போது மற்றவர்களை போலவே நோர்மலான வாழ்கை வாழ்ந்துவரும் lizze கூறுகையில் ''நான் தினமும் என் உடல் எடையை அளவிட்டு வருகிறேன் ஒரு பவுண்ட் எடை கூடி இருந்தாலும் எனக்கு ஆச்சரியமே என் எனெர்ஜி குறையாமல் இருக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நொறுக்கு தீனிகள் , ஐஸ் க்ரீம் , கேக் வகைகள் ,என சாப்பிட்டு கொண்டே இருப்பேன் ''என்கிறார்
டிஸ்கி : இரண்டு முறை சாவின் விளிம்பிற்கே சென்று வந்துள்ளார் இவர் இருந்தும் சோர்ந்து வீட்டுகுள்ளேயே முடங்கிவிடாமல் தன்னம்பிக்கையோடு சாவோடு போராடி வரும் இவர்நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான்