கவுன்சிலிங் கடிதம், அட்மிஷன் கடிதம், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆவணங்கள் கண்டிப்பாக தேவைப்படும். கல்லூரியில் அட்மிஷன் பெற்றிருந்தால், அக்கல்லூரியில் இருந்து ஒரு கடிதம் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்புக்கான செலவினங்கள் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஆவணங்கள் இருந்தால், வங்கியில் கடன் தரமுடியாது என மறுக்க முடியாது. தந்தை ஏற்கனவே கடன் பெற்று இருந்து, அதை சரிவர செலுத்தாமல் இருந்தால் கடன் வழங்க மறுக்கலாம். ஏற்கனவே சகோதரர் அல்லது சகோதரி கல்விக்கடன் பெற்று, வேலைக்குச் சென்றும் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் கடன் மறுக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களில் கடன் திருப்பிச் செலுத்தாமல் இருப்பின், இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். வேறு வங்கியில் சிலர் கணக்கு வைத்திருக்கக்கூடும். அந்த வங்கியில் கல்விக்கடன் கேளுங்கள். கொடுக்க மறுத்தால், அந்த வங்கியில் இருந்து கடன் கொடுக்க இயலவில்லை என்ற ஒப்புதல் கடிதத்தை பெற்று, எந்த வங்கியில் கல்விக்கடன் பெற வேண்டுமோ அந்த வங்கிக்கு விண்ணப்பிக்கலாம். இடைத்தரகர்களை எதற்காகவும் நம்பக்கூடாது. நேரடியாக மாவட்ட நிர்வாகத்தையோ, வங்கியையோதான் அணுக வேண்டும். வட்டி விகிதத்தில் மட்டுமே சில வேறுபாடுகள் இருக்கும். மற்றபடி விதிமுறைகள் அனைத்து வங்கிகளுக்கும்பொதுவானது. உள்நாட்டில் அதிகபட்சம் 10 லட்சமும், வெளிநாடாக இருப்பின் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாயும் கடன் வழங்கப்படும். நான்கு லட்சம் ரூபாய் வரை கையில் இருந்து எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு மேல் எனில் உள்நாட்டில் 10 சதவீதமும், வெளிநாட்டில் படிப்பதாக இருப்பின் 15 சதவீத தொகையையும் நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். கல்விக்கடன் பெறும் மாணவருடன் இணைந்து வங்கிக் கடன் செலுத்துபவரே கடனுக்கு பொறுப்பு; அல்லது பிணையம் நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் எனில், 7.5 லட்சம் வரை மூன்றாவது மனிதர் ஜாமீன் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு கடன் பெறும் அளவுக்கு சொத்து மதிப்பு இருக்க வேண்டும். எட்டு லட்சத்துக்கு மேல் இருப்பின், மூன்றாவது மனிதருக்கு அசையா சொத்து, கடன் தொகை அளவுக்கு இருக்க வேண்டும். ஏப் முதல் தேதி 2009ல் இருந்து 31 மார்ச் 2010 வரை கொடுக்கப்பட்ட கடனுக்கு வட்டி இல்லை. நடப்பாண்டுக்கு வட்டி குறித்து இதுவரை அறிவிப்பு வரவில்லை. படிப்பு முடிந்த பின் ஒரு ஆண்டு அல்லது வேலை கிடைப்பது இதில் எது முதலில் நடக்கிறதோ அப்போது இருந்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒரு வேளை வட்டி வசூலிப்பதாக இருப்பின் நான்கு லட்சம் ரூபாய் வரை 12 சதவீதம். 7.5 லட்சம் வரை ஒரு வட்டி விகிதமும், 20 லட்சம் ரூபாய் வரை ஒரு வட்டி விகிதமும் உண்டு. பெண்களுக்கு ஒரு சதவீத வட்டி குறைவு என்ற சிறப்புத்திட்டம் நடைமுறையில் உள்ளது. டிப்ளமோவுக்கு கடன் பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து பொறியியல் படிக்க விரும்பினால், அப்போதும் கல்விக்கடன் பெற முடியும். பி.இ., முடித்த பின்., எம்.இ., படிப்பதற்கும் கடன் கிடைக்கும். சொந்த இருப்பிடத்துக்கு அருகிலேயே கடன் வாங்கலாம்.கல்விக்கடன் பெறுவதில் பிரச்னையாக இருப்பின், ஆர்.எஸ்., புரத்தில் உள்ள கனரா வங்கிக்கிளையில் முன்னோடி வங்கி மேலாளரை அணுகலாம். அல்லது 9443364184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, வணங்காமுடி பேசினார்.
கல்விக்கடன் வாங்க ?