தேர்தல் முடிவடையும் வரை அரசியல் கட்சிகள் பின்பற்றப்பட வேண்டிய 27 நன்னடத்தை நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை வருமாறு
« எந்த ஒரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ சாதி, மதம் அல்லது பல்வேறு மொழி பேசுபவர்களிடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் அல்லது வேறுபாட்டை, பகைமையை வளர்க்கும், தூண்டும் வகையிலான பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
« கோயில், மசூதி, சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்யக் கூடாது.
« வேட்புமனு தாக்கல் செய்யும் போது 5 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். வேட்புமனு பரிசீலனையின் போது 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
« தேர்தல் பணிக்கு வேட்பாளர் பயன்படுத்தும் வாகனத்திற்கு தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதன் ஒரிஜினல் நகலை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.
« கல்வி நிலையங்களையோ, அங்குள்ள விளையாட்டு மைதானங்களையோ பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
« பொது கட்டிடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவதோ, விளம்பரங்கள் எழுதுவதோ கூடாது. தனியார் கட்டிடங்களில் உரிமையாளரிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும்.
« அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அச்சடிக்க கூடாது.
« வேட்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு புடவை, சட்டை போன்ற இலவச ஆடைகளை வழங்கக்கூடாது.
« தேர்தல் பிரசாரம் முடிந்து வாக்குப்பதிவு முடிவடையும் வரை வேட்பாளர் சம்பந்தப்பட்ட விபரங்களை வாக்காளர்களுக்கு திரைப்படம், வீடியோ மூலம் திரையிடக்கூடாது.
« வேட்பாளர் தனது படம் அச்சடிக்கப்பட்ட டைரி, காலண்டர், ஸ்டிக்கர்களை வாக்காளர்களுக்கு வழங்கக்கூடாது.
« தேர்தல் நேரத்தில் கட்சிகள் தற்காலிக அலுவலகங்களை அமைக்கலாம். ஆனால் தனியார் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது, மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அதனை ஒட்டி அமைக்கக்கூடாது. வாக்குச்சாவடி எல்லையிலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்கு அமைக்கக்கூடாது.
« தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த, ஊர்வலங்கள் செல்ல, ஒலி பெருக்கி அமைக்க போலீசாரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டங்கள், ஒலி பெருக்கிகளை இரவு 10 மணிக்கு பிறகும், அதிகாலை 6 மணிக்கு முன்பும் பயன்படுத்தக்கூடாது.
« வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு 48 மணிக்கு முன்பு பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
« வாக்குச்சாவடியில் தலைமை அலுவலர், பார்வையாளர் மற்றும் மைக்ரோ அப்சர்வர், பாதுகாப்பு அலுவலர் தவிர மற்றவர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது.
« வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கோ அல்லது வாக்குச் சாவடியிலிருந்து வசிப்பிடங்களுக்கோ வாகனங்கள் மூலம் அழைத்து செல்லக்கூடாது