திருவாரூர், மார்ச் 24: தமிழக முதல்வர் மு.கருணாநிதி தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.44 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவுடன் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அத்துடன் அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம்: கருணாநிதி பெயரில் உள்ள சொத்துகள்: கையிருப்பு ரொக்கம் ரூ.15,000. வங்கிகளில் உள்ள நிரந்தர வைப்புகள்: கோடம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.4,13,49,152, கர்நாடக வங்கியில் ரூ.39,62,995, நடப்புக் கணக்கு ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் ரூ.10,956, ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ராசாத்தியுடன் கூட்டுக் கணக்கில் ரூ.13,15,180. அஞ்சுகம் பதிப்பகத்தில் 50 சதவீதப் பங்கு ரூ.78,330, தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 14.30 ஏக்கர் நிலம் உள்ளது. மனைவி தயாளு அம்மாள் பெயரில்...:கையிருப்பு ரொக்கம் ரூ.30,000. நிரந்தர வைப்புகள்: கோடம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளையில் ரூ. 5,22,10,327, கொத்தவால் பஜார் இந்தியன் வங்கியில் ரூ.29,23,055, கோடம்பாக்கம் கர்நாடக வங்கிக் கிளையில் ரூ.39,62,995, அடையாறு கரூர் வைஸ்யா வங்கியில் ரூ. 13,74,664, கோடம்பாக்கம் கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.3 கோடி, சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் நடப்புக் கணக்கில் ரூ.4,764, கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கில் ரூ.2,66,225, சென்னை கோடம்பாக்கம் இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.1,65,380. தேசிய சேமிப்புப் பத்திரங்கள் ரூ.50,000, ஹோண்டா அக்கார்ட் கார் ரூ.16,02,321, பழைய தங்க நகைகள் 716.34 கிராம் மதிப்பு ரூ.10.96 லட்சம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60,06,000 பங்குகள் மதிப்பு ரூ.6 கோடி, அஞ்சுகம் பதிப்பகம் நிறுவனத்தில் 50 சதவீதப் பங்கு மதிப்பு ரூ.78,330, தயாளு குடும்ப அறக்கட்டளைக்கு மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் நிலம், திருவாரூர் மாவட்டம், வடக்குசேத்தி, மனை ரூ.5.51 லட்சம். துணைவியார் ராசாத்தி அம்மாள் பெயரில்...: கையிருப்பு ரொக்கம் ரூ.2 லட்சம். நிரந்தர வைப்புகள்: ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.8,41,06,067, ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் ரூ.6,97,92,974, ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு ரூ.11,378, ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கிளையில் ரூ. 4,84,027. வணிக முதலீடுகள் வெஸ்ட் கோஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் 25,00,000 பங்குகள் ரூ.2.50 கோடி, சொந்தத் தொழிலில் முதலீடுகள் ரூ.2,56,81,878, பழைய தங்க நகைகள் 640 கிராம் மதிப்பு ரூ.9,85,600, மயிலாப்பூர் சி.ஐ.டி.யு. காலனி வீடு மதிப்பு ரூ.3,14,38,628. கடன் பொறுப்புகள் விவரம்: மு.கருணாநிதி மூலக் கதையை, திரைப்படமாக எடுப்பவருக்கு விற்பதற்காக, பெற்ற முன்பணம் மோசர்பேர் நிறுவனத்திடமிருந்து பெற்றது ரூ. 10 லட்சம். ராசாத்தி அம்மாள், கனிமொழியிடமிருந்து பற்றில்லாக் கடனாகப் பெற்றது ரூ.1,01,76,503. இதன்படி, கருணாநிதிக்கு அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.4,92,56,885. அசையா சொத்துகள் ஏதுமில்லை. தயாளு அம்மாளுக்கு அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 15,39,85,363, அசையா சொத்துகள் ரூ.5,22,635, ராசாத்தி அம்மாளுக்கு அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ. 20,62,61,924, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 3,08,35,318 என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.