விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் ரஷ்யா
ரஷ்யாவின் ஜனாதிபதி திமித்ரி மெத்வெதேவ் தலைமையில், அரசசார்பற்ற மற்றும் பொது நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜூலியனை விடுவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசினை வழங்குவதற்கு பரிந்துரை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளதாக, பிரிட்டனை தளமாக கொண்டியங்கும் ‘த கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர், ‘மாபியா குழுவினர்’ எனவும், ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புட்டின் ஒரு ‘அல்பா டாக்’ எனவும் அரச உயர் மட்டத்தலைவர்களிடையே கேலியாக பேசப்படுவதுண்டு என அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது விரிவாக பார்க்க
பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் கைதான ஜூலியன் அசாஞ்சே தற்சமயம் லண்டன் சிறைச்சலையில் தடுப்புக்காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சீன அரச எதிர்ப்பாளர் லியூ ஷியபோவிற்கு சமானாத்துக்கான நோபல் பரிசு கொடுப்பதை கடுமையாக எதிர்த்திருந்த ரஷ்யா, ஆசாஞ்சேவிற்கு இவ்விருதை வழங்க பரிந்துரை செய்வது, வேடிக்கையாகவா? அல்லது அமெரிக்காவுக்கு வஞ்சம் தீர்க்கவா? என்ற கேள்வி எழுப்படுகின்றது