பாபர் மஸ்ஜித் தீர்ப்பு-மறுக்கப்பட்ட நீதி

*அறுபது ஆண்டுகள் கழித்து தங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருந்த முஸ்லிம்களை இந்த தீர்ப்பு ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது!

ஆவணங்களின் அடிப்படையில் இடம் யாருக்கு சொந்தம் ? என தீர்ப்பு வழங்காமல் 'குரங்கு அப்பத்தை பங்கு வைத்த கதை' போல சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பங்காக பிரித்து வழங்கும் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பு 'கடைத் தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த' கதையாக உள்ளது!

'பன்னிரண்டு ஆண்டுகள் பயன் படுதியவர்க்கு நிலம் சொந்தம்'என்று சட்டம் வகுத்து விட்டு
நானூற்றி ஐம்பது ஆண்டு தொழுகை நடந்த இடத்தை 'இங்கு தான் ராமர் பிறந்தார்' என்று அராஜகமாக ஆக்ரமித்த அக்கிரமத்தை அனுமதிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கிறது!

நிலத்திற்கு உரிமை கோரும் சன்னி வக்ப் வாரியத்தின் மனு தள்ளபடி செய்யபட்டிருப்பதும்,
சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்ட சிலைகள் அங்கு நீடிக்கும் என்பதும் முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுவர்.

முஸ்லிம்கள் இது போன்று நம்பிக்கையின் அடிப்படையில் உரிமை கோரினால் இது போன்று நீதி மன்றங்களும் , அரசும் நடந்து கொள்ளுமா? ஏன் எனில் அனைத்து அரசு கட்டிடங்களும், நீதி மன்றங்களும் முஸ்லிம்களின் கலாச்சாரத்தை பிரதி பலித்து கொண்டு நிற்கின்றன.

இந்த நாட்டில் மக்கள் தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதி மன்றங்களை நம்பிக் கொண்டுள்ளனர்.அந்த நம்பிக்கை பொய்க்குமானால் அவர்கள் நீதியை வேறு வழிகளில் தேட நாடினால் விளைவு என்னாகும்?

எப்படி இருப்பினும் மூன்று மாதங்கள் தற்போதைய நிலை நீடிக்கும் என்பதும் உச்ச நீதி மன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மேல் முறையீடு செய்யும் என்பதும் தெரிகிறது! அது வரை அனைவரும் அமைதி காப்பதை தவிர வேறு வழியில்லை.

*பாபர் உத்தரவால் மசூதி கட்டப்பட்டது: நீதிபதி எஸ்.யு. கான் வியாழன், 30 செப்டம்பர் 2010( 19:05 IST )


FILEஅயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு. கான் அளித்த தீர்ப்பின் முக்கிய சாரம்சம் வருமாறு:

1) சர்ச்சைக்குரிய இடம் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதியாக கட்டப்பட்டுள்ளது.

2 ) கட்டடம் இருந்த இடம் உள்பட சர்ச்சைக்குரிய இடம் பாபருக்குரியதா அல்லது அந்த மசூதியை கட்டியவருக்கு சொந்தமானதா அல்லது யாருடைய உத்தரவின் பேரில் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.

3) மசூதி கட்டுவதற்காக எந்த ஒரு கோவிலும் இடிக்கப்படவில்லை.

4) மசூதி கட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தில் இடிந்துபோன கோவிலின் சிதலங்கள் கிடந்தன.அந்த சிதலங்கள் மீதுதான் மசூதி கட்டப்பட்டது.அத்துடன் மசூதி கட்டுவதற்கு அந்த சிதல பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5) மசூதி கட்டப்படும் வரை, மிகப்பெரிய இடமான அதன் ஒரு சிறிய இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நீண்ட காலமாக கருதினார்கள்/ நம்பினார்கள். அதே சமயம் அவர்கள் நம்பியது அந்த பெரிய இடத்தில் உள்ள எந்த ஒரு குறிப்பிட்ட - சர்ச்சைக்குரிய - இடத்தையும் அல்ல.

6) மசூதி கட்டப்பட்ட பின்னர்தான், ராமர் பிறந்த இடமாக கருதும் இடத்தை இந்துக்கள் அடையாளம் காணத் தொடங்கினார்கள் அல்லது அங்குதான் ராமர் பிறந்த இடம் உள்ளதாக அடையாளம் காணத்தொடங்கினார்கள்.

7) 1855 ஆம் ஆண்டுக்கு வெகு காலம் முன்னரே ராமரும், சீதாவும் அங்கு வந்து தங்கியிருந்ததாக கருதும் இந்துக்கள் அந்த இடத்தை வழிபட ஆரம்பித்துவிட்டனர். மசூதியின் உட்புற சுவர் மற்றும் சுற்றுச்சுவர் எல்லையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருந்தது என்பதும், அவற்றையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது மிக மிக புதுமையானதாகவும், முற்றிலும் முன்னர் எப்போதும் நடந்திராததாகவும் இருந்துள்ளது.

8) மேற்கூறிய சாரம்த்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இடத்தின் முழுப்பகுதிக்கும் கூட்டு உரிமையாளர்களாக உள்ளனர்.

9) இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்ட போதிலும், இப்பவும் அது ஒரு முறையான பாகப்பிரிவினையாக இல்லை; இரு தரப்புக்குமே சர்ச்சைக்குரிய ஒட்டுமொத்த இடத்திலும் கூட்டு உரிமை உள்ளது.

10) 1949 ஆண்டுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் பகுதிதான் ராமர் பிறந்த இடம் என்று கருதி/நம்பி வழிபட தொடங்கிவிட்டனர்.

11) 23.12.1949 அன்று அதிகாலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் முதல் முறையாக ராமர் சிலை நிறுவப்பட்டது.

12) மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இருதரப்புக்குமே சர்ச்சைக்குரிய இடம் பாத்தியப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.

*அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அகில இந்திய இஸ்லாமிய சட்ட வாரியம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த அந்த வாரியத்தின் வழக்கறிஞர் ஜிலானி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பு குறித்து கோபம் கொள்ள தேவையில்லை என்றார்.

மேலும் இந்த முடிவினால் யாரும் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும், இந்த பிரச்சனையை வீதிக்கு கொண்டு செல்லாமல் மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிப்பார்கள் என்று நம்புவதாகவும் ஜிலானி தெரிவித்தார்.

தீர்ப்பு அளித்த 3 நீதிபதிகளில் இரண்டு பேர், மசூதியில் தொழுகை நடந்தது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.மசூதி எந்த தேதியில் கட்டப்பட்டது என்பதுதான் பிரச்சனையே.அதன் காரணமாகத்தான் மூன்றில் ஒரு பங்கு இடத்தை வஃக்பு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது நீதிமன்றம்.

அலகாபாத் நீதிமன்ற்ம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு முற்றிலும் எங்களுக்கு ஏற்புடையதே என்று அவர் மேலும் தெரிவித்தார்.

*லக்னோ ,செப். 30 . (டி என் எஸ்) ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கின் இறுதி உயர் நீதிமன்ற தீர்ப்பு மிகப் பெரிய அளவாக 8189 பக்கங்கள் கொண்டுள்ளது.

இந்த 60 ஆண்டு பழமையான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிப்கத் உல்லா கான், சுதிர் அகர்வால், தரம் வீர் ஷர்மா ஆகிய மூவரும் தனிதனி தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

நீதிபதி அகர்வால் தான் மிக நீண்டதொரு தீர்ப்பினை வழங்கினார். அவரது தீர்ப்பு 21 தொகுதிகளில் 5238 பக்கங்களைக் கொண்டது.

நீதிபதி ஷர்மாவும் நான்கு வழக்குகளுக்கான தனித்தனி தீர்ப்பாக 2666 பக்க தீர்ப்பினை வழங்கினார். அவரது தீர்ப்பில் தெளிவான குறியீடுகளுடன் கூடிய 1566 பக்க இணைப்பும் அடங்கியுள்ளது.

நீதிபதி கான் தான சற்று சுருக்கமான தீர்ப்பினை வழங்கினார். அவரது தீர்ப்பு 285 பக்கங்கங்களை மட்டுமே கொண்டிருந்தது. (டி என் எஸ்)





*
*
*
*
*

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...